கேனக்கல்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகலில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இங்குநேற்று காலை 6 மணி நிலவரப்பட வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த்துள்ளது.

இதனல மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பாறைகளுக்கு இடையே உற்சாகமாக பரிசல் சவாரி செய்கையில் காவல்துறையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.