நானும் ரவுடிதான் பட கிளிப்பிங்குகளை நயன்தாரா தனது நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் பயன்படுத்த தனுஷிடம் 2 ஆண்டுகளாக அனுமதி கேட்டும் இதுவரை பதிலில்லை.
மேலும், டிரைலரில் வெளியான 2 நொடி பாடலுக்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தனுஷ்.
தனுஷின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள நயன்தாரா “அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்” என்ற பொருள் படும் ஜெர்மன் வார்த்தையை (Schadenfreude) கூறியுள்ளார்.
மேலும், “நான் உங்களைப் போல் உங்கள் அப்பா மற்றும் அண்ணன் தயவில் சினிமாவுக்குள் வந்தவள் அல்ல தனியாக போராடி இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் தனுஷின் வன்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளியான படம் நானும் ரவுடிதான்.
இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய நிலையில் அதில் நடித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையே காதல் மலர்ந்து அது 2022 ஜூன் மாதம் கல்யாணத்தில் முடிந்தது.
இந்த நிலையில் நயன்தாரா-வின் ஆவணப்படத்தை OTT-யில் வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டமிட்டது.
அதில் தானும் விக்னேஷ் சிவனும் முதலில் சந்தித்துக்கொண்ட நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடலை பயன்படுத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி நயன்தாரா அனுமதி கேட்டிருந்தார்.
ஆனால், இதற்கு இதுவரை எந்தபதிலும் கூறாத தனுஷுக்கு நயன்தாரா காட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.