மனைவியிடம் இருந்து நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து கோரிய வழக்கில், சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும், 2009 ஆண்டு பதிவு செய்த தங்களுடைய திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை 3-வது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ஜெயம் ரவி, நேரில் ஆஜரான நிலையில், மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார்.

இதனையடுத்து நீதிபதி இருவருக்கு இடையேயான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.