சென்னை
தமிழக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஜனவரி முதல் ரேஷன் கார்ட் வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கபடும் என அறிவித்துள்ளார்.
இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தனது உரையில்,
“உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை சிலருக்கு விடுபட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
அதேபோல முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். எனக்கு ஆயுள் உள்ளவரை உங்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். கடவுள் என்னை எத்தனை நாட்களுக்கு ஓட விடுகிறாரோ, அத்தனை நாட்களும் உங்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன்”
என்று தெரிவித்துள்ளார்.