சென்னை: கிண்டி கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அரசு மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து, அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவகல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், இன்று காலை பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜியிடம் சிகிச்சைக்கா கதனது தாயாரை அழைத்து வந்தவர்கள், மருத்துவர் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறியதால், மருத்துவருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நோயாளியின் மகன் ஆத்திரத்தில் மருத்துவரை தான் வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவர்பாலாஜி உடனே அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவர் பாலாஜியை குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் அரசு மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்துவிபந்த சம்பவத்தை கண்டித்து கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவகல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.