ராமேஸ்வரம்

லங்கை கடற்படையினர் மேலும் 12 ராமேஸ்வர மீன்வர்களை கைது செய்துள்ளனர்.

கடந்த 9 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 23 மீனவர்களையும் நடுக்கடலில் சிறைபிடித்து கைது செய்து 3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

நேற்று 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது 23 மீனவர்களையும் வருகிற 25-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையொட்டி அந்த 23 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று மிண்டும் பருத்தித்துறை அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையின் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.