கிருஷ்ணகிரி
நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு பிற்பகல் 1.32 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நில அதிர்வின் தாக்கம் அரசம்பட்டி, பண்ணந்தூர், மஞ்சமேடு, பனங்காட்டூர், சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel