கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்தின் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சென்சார் போர்ட் அந்தப் படத்திற்கு UA சான்று வழங்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ள தணிக்கைக் குழு படத்திற்கு ‘UA’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதை தனது சமூக வலைத்தளத்தின் மூலம் தெரிவித்துள்ள கங்கனா ரனாவத் விரைவில் படத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.