விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் KVN Productions நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் தளபதி 69 குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கவனம் செலுத்த நினைத்த விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தனது நடிப்பை தொடர ஆர்வம் காட்டி வருகிறார்.

தளபதி 69 படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் இதன் அடுத்தகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தளபதி 68வது படமான கோட் படத்திற்கு நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படும் நிலையில் தற்போது தளபதி 69 படத்திற்கு ரூ. 275 கோடி சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதையடுத்து இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள ஷாருக்கானை மிஞ்சி அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், உலகம் முழுவதும் வாழும் சுமார் 10 கோடி தமிழர்களில் சினிமா பார்ப்பதைப் பொழுபோக்காக கொண்டவர்கள் 10 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே, அதாவது சுமார் 1.5 கோடி பேர், என்று புள்ளிவிவரம் கூறுகிறது,

டிக்கெட்டுக்காக இவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ரூ. 200 செலவு செய்யும் நிலையில் ஒரே நடிகர் இத்தனை பெரிய தொகையை சம்பளமாக பெறுவது என்பது திரைப்பட துறைக்கு ஆரோகியமான ஒன்றா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் வெளியானது… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி…