சென்னை: கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட தமிழ்நாடு வருகிறார் பாஜக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சென்னை வருகிறார். சென்னையில் வரும் 17ந்தேதி நடைபெறும் விழாவில் ரூ.100 கருணாநிதி உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான  மறைந்த திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அரசு சார்பில்கடந்த 2023ம் ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.  இந்த  நாணயத்தை, கடந்த ஜுன் 3-ல் முடிந்த கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் வெளியிடத் திட்ட மிடப்பட்டிருந்தது.  ஆனால், தேர்தல் உள்பட  பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.100 கருணாநிதி நாணயம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நினைவூட்டப்பட்டது. இதை ஏற்று,  நாணயத்திற்கான அனுமதியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெப்பம் இட்டார்.

இதைத்தொடர்ந்து,  கருணாநதி  நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் தமிழக அரசிட மிருந்து பெறப்பட்டது.

இந்த நிலையில்,. வரும் 17ந்தேதி கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வெளியிடப்பட உள்ளது. இந்த  நாணயத்தை அதிகாரப்பூர்வமாக ஆக.17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  கலந்துகொண்டு ரூ.100 நாணயத்தை வெளியிடுகிறார்.

இந்த  விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்தமுறை, மத்தியஅரசு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவுநாணயத்துடன், மேலும் இரண்டுநாணயத்துக்கும் அனுமதி அளித்துள்ளது. அதன்படி,  உச்ச நீதிமன்றத்தின் 75 ஆவது ஆண்டு – விழா மற்றும் மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் நூற்றாண்டு விழாவிற்கான நினைவு நாணயங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  இதற்குமுன்பு,  முன்னாள்முதல்வர்களான காமராஜர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தலைவர்கள், பல்வேறு கலைஞர்கள் உள்ளிட்டோர் மீதான பல நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.100 மதிப்பில் கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம்! மத்தியஅரசு அனுமதி…

கலைஞர் ரூ.100 சிறப்பு நாணயம்! அரசிதழில் ஆணை வெளியிட்டது மத்தியஅரசு…