சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,  தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் கனமழையும் அவ்வப்போது கொட்டி வருகிறது. இதனால் குளம், ஏரிகள் உள்படநீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.  இதனால் சில பகுதியில்  எதிர்பாராத  பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து,  சென்னை தலைமைச் செயலகத்தில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், . காணொலி காட்சி வாயிலாக கூட்டம்  நடந்து வருகிறது. இதில்,   துறை அமைச்சர்கள்,  . நீலகிரி, கோவை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  பேரிடர் மீட்பு படை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  பருவமழை பாதிப்புகள், மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள், மீட்புப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும்,   மாவட்ட ஆட்சியர்கள், மழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னறிவிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அறிவுரைகள் வழங்கி வருகிறார்.