வேலூர்: உடல்நலப் பாதிப்பு காரணமாக, கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வதந்திகள் பரவி வருகிறது. இவ்வாறு வதந்திகளை பரப்ப வேண்டாம் என நெட்டிசன்களுக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனை வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னாள் மத்தியஅமைச்சரும், திமுக தென்மண்டல பொறுப்பாளரான மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஓரக்கப்பட்டப்பட்டார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். இதற்கிடையில், அவரது மகடன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அவருக்க மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவரை உடனே சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைஅளித்தனர். அங்கு அவரது மூளையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதி உடல் நலத்தை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து சுமார் 3 மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலை சற்று தேறிய நிலையில், மேல் சிகிச்சைக்காக 2024 மார்ச் மாதம் 14ஆம் தேதி வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் அவருடைய உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வந்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில், தற்போதும் துரை தயாநிதி இறந்துவிட்டதாக சமூக தலைவதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இதனால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், துரை தயாநிதிக்கு சிகிச்சை நல்லபடியாக நடந்து வருவதாகவும், அவர் உடல் நல்ல நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.