சென்னை

செந்தில் பாலாஜி வங்கி ஆவணங்களை வழங்கக் கோரிய மனு மீது வரும் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிமாற்ற மோசடி வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு அடுத்தடுத்து அவர்மீது வழக்குகள் கொடுக்கப்பட்டுள்ள்ன  செந்தில் பாலாஜியி நீதிமன்றக் காவ்ல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

செந்த்ஹில் பாலாஜி தரப்பில் தன்னை இந்த வழக்குகளில் புதிதாக ஆவணங்களை கேட்டும் சில விளக்கங்கள் கேட்டும் அடுத்தடுத்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி புதிதாக மூன்று மனுக்களை தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் ஜூலை 8-ம்தேதி விசாரணை செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிகப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.