தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது.
இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களில் ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற 38 தொகுதிகளிலும் திமுக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதிகள் இழுபறியாக இருந்துவந்த நிலையில் கடந்த சில சுற்றுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
இதனால் 2004க்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்ற உள்ளது.