லூசியானா

மெரிக்க அரசு கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கருக்கலைப்பை தூண்டும் மைபெப்ரிஸ்டோன் மற்றும் மிசோப்ரோஸ்டால் ஆகிய மாத்திரைகளால் அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணிகளுக்கு பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டன. எனவே இந்த மாத்திரைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த மசோதா லூசியானா மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

லூசியானா மாகாண சட்டமன்றத்தில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து ஆளுநர் ஜெப் லாண்ட்ரி அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதலின்ன் மூலம் இந்த இரு மாத்திரைகளும் ஆபத்தான பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

ஆகவே டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இன்றி இந்த மாத்திரை வழங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.