சென்னை
வரும் 10 ஆம் தேதி வரை சென்னை திருப்பதி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன
திருப்பதியிலிருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06728), மறுமார்க்கமாக சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06727) வரும் 10-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (வண்டி எண். 16854), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16853) வரும் 14-ந்தேதி வரையில் ழுழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06753), மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (06754) வரும் 10-ந்தேதி வரையில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, திருப்பதியிலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் (17407) வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக மன்னார்குடியிலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் (17408) வரும் 11, 13, 15 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
புதுச்சேரியிலிருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16112) வரும் 12, 23 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, திருப்பதியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16111) வரும் 11, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.”
என்று கூறப்பட்டுள்ளது.