சென்னை: மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் செயல்படுத்தி வந்த நடிகர் விஜய், தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, அவரது மக்கள் இயக்கம் நிர்வாகிகள் வரும் 4ந்தேதி டெல்லி சென்று தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான குழுவினர் பிப்ரவரி 4-ம் தேதி டெல்லி செல்கின்றனர். இதன் காரணமாக அவரது இயக்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் நடிகர்களில் முதலிடத்தில் இருந்த வருபவர் நடிகர் விஜய். மிழக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நாயகனாகவும் வளம் வருகிறார். இவரது ஒவ்வொரு படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதே வேளையில் இவர் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி சமூக சேவைப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் இளைய சமுதாயத்தை கவரும் வகையில், தமிழகம் முழுவதும் மாணவர் படிப்பியக்கம், நூலகம் என பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவ்வப்போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் பெய்த பேய் மழை மற்றும் வெள்ளத்தின்போது சென்னை மற்றுமின்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரடியாக சென்று, நிவாரண உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சி குறித்து பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிலும் ஒரு மாதத்தில் முறைப்படி கட்சி தொடங்குவதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்வது எனவும் கட்சியின் தலைவராக விஜய் தொடர்வார் எனவும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டி, கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 4-ம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜயின் இந்த நடவடிக்கை பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. வருத் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறும் நிலையில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்துதான் விஜய் இப்போதே காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.