சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில்முதலீடுகளை ஈர்ப்பதாற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று  ஸ்பெயின் புறப்படுகிறார். 15 நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர்  பிப்ரவரி 12ந்தேதி சென்னை திரும்புகிறார்.

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், இன்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்படும் விமானத்தில் பயணிக்கும் ஸ்டாலின், துபாய் சென்று அங்கிருந்து ஸ்பெயின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் முதலமைச்சர் ஸ்டாலின்  பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, முக்கிய அரசு அதிகாரிகளையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதலமைச்சர் பயணிக்கவுள்ளார்.

வெளிநாடு பயணத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்நிறுவனங்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு, பிப்ரவர் 12ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

முதலமைச்சருடன் அவரது மனைவி துர்கா உள்பட குடும்பத்தினர் சிலர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது அவர் மருத்துவ சிகிச்சை பெற உள்ளதாகவும், சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.