டில்லி

ர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தின் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நீதிபதிகள் சஞ்சிவ் கன்னா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், அனிருதா போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் கடந்த 25ஆம் ந்தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, காலியாகி இருக்கும் அந்த இடத்துக்கு நீதிபதியை நியமிப்பது குறித்து கொலிஜியம் பரிசீலித்தது. கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலேவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளில் மிகவும் மூத்த நீதிபதியும், எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த ஒரே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் பிரசன்னா பி.வரலே என்பதையும் கொலிஜியம் கருத்தில் கொண்டதாக உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.  நீதிபதிகளின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு காலியிடத்தை விரைவாக நிரப்புவது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.