ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் சடங்குகளில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, “அயோத்தியில் ராம் லல்லா கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த சுபநிகழ்ச்சிக்கு நானும் சாட்சியாக இருப்பதில் நான் அதிர்ஷ்டசாலி.
கும்பாபிஷேகத்தின் போது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்த இறைவன் என்னை ஒரு கருவியாக ஆக்கியுள்ளார். இதை மனதில் வைத்து இன்று முதல் 11 நாட்கள் சிறப்பு பூஜையை தொடங்குகிறேன். பொதுமக்களாகிய உங்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் தேடுகிறேன்.
இந்த நேரத்தில் எனது உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது மிகவும் கடினம், ஆனால் எனது தரப்பிலிருந்து முயற்சி செய்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி 11 நாட்களுக்கு என்ன கடுமையான விதிகளை கடைபிடிக்க போகிறார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது, அதன்படி விரதம் மேற்கொள்பவர்கள் 45 விதமான ஆகம விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த விதிகள் வேதங்களில் மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இந்த விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஆன்மாவும் உடலும் முற்றிலும் தூய்மைப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், சாதாரண உப்பை சாப்பிடக்கூடாது, கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது, படுக்கையில் தூங்க முடியாது. கட்டிலில் உறங்குவதும் உட்காருவதும் தடை செய்யப்படும்.
பருத்தி வேட்டி மற்றும் அங்கவஸ்திரம் மட்டுமே அணிய வேண்டும் தவிர, கம்பளி சால்வை, போர்வை போன்றவற்றை பயன்படுத்தலாம்.
மஞ்சள், கடுகு, உளுந்து, முள்ளங்கி, கத்தரி, பூண்டு, வெங்காயம், மது, முட்டை, இறைச்சி, எண்ணெய் பொருட்கள், பருப்பு, அரிசி, கடுகு, புஜியா, வெல்லம் போன்றவை உணவில் தடை செய்யப்பட்டுள்ளன.
प्राण-प्रतिष्ठा से पूर्व 11 दिवसीय व्रत अनुष्ठान का पालन मेरा सौभाग्य है। मैं देश-विदेश से मिल रहे आशीर्वाद से अभिभूत हूं। https://t.co/JGk7CYAOxe pic.twitter.com/BGv4hmcvY1
— Narendra Modi (@narendramodi) January 12, 2024
கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவை பிரசாதமாக உட்கொள்ளலாம், தவிர சாத்விக உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
கோபம், ஈகோ ஆகியவற்றிலிருந்து விடுபட்டு மனதை சிதறடிக்கும் காட்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். உண்மையைப் பேசும் சபதத்தில் சிரமங்கள் ஏற்பட்டால், ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும்.
கடுமையான வார்த்தைகளை பேசுவதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் கூடாது போன்ற கடுமையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ராமர் கோயிலில் ராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கும் பிரதமர் மோடி 11 நாட்கள் மேற்கொள்ள இருக்கும் சிறப்பு பூஜையின் போது இந்த விதிகளை கடைபிடிப்பார் என்று கூறப்படுகிறது.