மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
2023 டிசம்பர் மாதம் 5 ம் தேதி சென்னை முழுவதும் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டது.
இது டிசம்பர் 6 ம் தேதி பிற்பகலுக்குப் பிறகு ஓரளவு சீரானது.
இந்த நிலையில் ஆவின் பால் வாடிக்கையாளர்கள் ஜனவரி – பிப்ரவரி மாதத்திற்கான கார்ட் புதுப்பிக்கும் போது டிசம்பர் 5 ம் தேதி ஒருநாள் பால் நிறுத்தப்பட்டதற்கான பணம் திரும்ப அளிக்கப்படுகிறது.
இதற்காக 2023 நவம்பர் – டிசம்பர் மாதத்துக்கான பழைய கார்ட் கொண்டு வர பால் நுகர்வோர் சங்கங்கள் அறிவுறுத்தியுள்ளது.