சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது,.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரராக குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையை பவுர்ணமி நிலவில் சுற்றி வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருவண்ணாமலையில் இன்றும் பல சித்தர்கள் சுயரூபம் மற்றும் அரூருபமாக வாழ்ந்து வருவதாக வரலாறு. அதனால் பக்தர்கள் மலையை வலம் வந்தால் நன்மைகள் பயக்கும் என்பது நம்பிக்கைகை. அதனால், பக்தர்கள் இந்த மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.
மாந்தோறும் பவுர்ணமி தினங்களில் பல லட்சக்கணக்கானோர், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து, தங்களது ஆசைகளை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில், வரும் 30ந்தேதி ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி வருவதால், பொதுமக்கள், பக்தர்கள் கிரிவலம் வருவது குறித்த அறிவிப்பை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி இன்று அதிகாலை 5.56 முதல் நாளை அதிகாலை 6.07மணி வரை கிரவலம் வர உகந்த நேரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 ஏ.சி. பேருந்துகள் உள்பட 250 பஸ்களும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் இருந்து 50 பஸ்களும் என 350 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்கள் www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.