சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் 2வது முறை நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களை ஆளுநர் ரவி, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை நவம்பர் 16ந்தி ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதன்படி, தமிழகத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக உள்ள ஆளுநரை நீக்கிவிட்டு தமிழக முதல்வரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற மசோதாவாகும். இந்த மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறப்படும் நிலையில், உயர்கல்வியின் தரம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பல்கலைக்கழகங்களில் வேந்தரான ஆளுநரை நீக்கிவிட்டு, தமிழக முதல்வரை நியமிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறப்பட்டு வருகிறது.
ஆளுநர் தமிழக மசோதாக்களை திருப்பி அனுப்பியதைத்ம தொடர்ந்து தமிழ்நாடு அரசு, சிறப்பு சட்டப்பேரவையை நவ. 18ந்தேதி அன்று கூட்டி, ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. சட்டப்பேரவையில் 2வது முறை நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது அவசியம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மிண்டும் தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழக சட்டபேரவையில், 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளித்தாக வேண்டும். ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். துணைவேந்தரை நியமிக்கக்கூட மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு எதிரொலி: 10 மசோதாக்களை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…