சென்னை

நாளை அந்தமான் கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று  தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29 ஆம் தேதி (புதன்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.