மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர பிரதாப் சிங் தோமர் ஒப்பந்தம் ஒன்றுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பெற்றதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கடந்த வாரம் வெளியான வீடியோவில் தேவேந்திர பிரதாப் கோடிக்கணக்கில் பேரம் பெற்றதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுக்கடுக்கான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரும் மத்திய பிரதேச மாநிலம் மொரீனாவின் திமானி தொகுதி பாஜக வேட்பாளருமான நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நரேந்திர சிங் “இது போலியான குற்றச்சாட்டு எனவும், போலி வழக்குகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தேவேந்திர பிரதாப் குறித்து வெளியான வீடியோவில் அவருடன் பேரத்தில் ஈடுபட்ட நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தேவேந்திர பிரதாப் தன்னுடன் பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்றும் இந்த மொத்த விஷயமும் 100 அல்லது 500 கோடி ரூபாய்க்காக அல்ல. அது 10000 கோடி ரூபாய்க்கான பேரம்” என்று கூறியுள்ளார்.
नरेंद्र सिंह तोमर के बेटे देवेंद्र तोमर के करोड़ों का लेनदेन करते वायरल वीडियो मामले में नया खुलासा हुआ है। वीडियो कॉल पर मंत्री पुत्र से बात कर रहे शख़्स ने नया वीडियो जारी कर पूरी बातचीत की पुष्टि की है।
यह पूरा मामला 100 या 500 करोड़ का नहीं बल्कि 10000 करोड़ का होना बताया जा… pic.twitter.com/OdBVoot6bR
— MP Congress (@INCMP) November 14, 2023
மேலும் நரேந்திர சிங் தோமரின் மகன் சணல் சாகுபடிக்காக வெளிநாட்டில் 100 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
10000 கோடி ரூபாய் பேரம் குறித்த இந்த புதிய வீடியோ வெளியாகி தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மத்திய அமைச்சர் மற்றும் அவரது மகனின் பேரம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.