இனிப்பு கடைகளில் விற்கப்படும் பொருட்கள் மீது ‘எந்த தேதி வரை பயன்படுத்தலாம்’ (Best Before Date) என்ற குறியீடு கட்டாயமில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தமாதம் 7ம் தேதி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
இனிப்பு கடைகளில் சில்லறை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கண்டெய்னர்கள் மீது Best Before Date என்று குறிப்பிடவேண்டும் என்று 25-9-2020 ல் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இதன் சாத்தியக்கூறு மற்றும் அறிவியல் பூர்வமாக இதனை உறுதிப்படுத்த மாற்று வழிகளை உணவுப் பாதுகாப்புத் துறை ஆலோசித்து வருவதாகவும் அதுவரை ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
இருந்தபோதும் உணவுப் பொருட்களின் மீது அதன் தயாரிப்பு மற்றும் எந்த தேதி வரை பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுவது கட்டாயமில்லை என்றும் அது உணவுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தைப் பொறுத்தது என்று விளக்கமளித்துள்ளது.
[youtube-feed feed=1]கோயம்பேடு மளிகை பொருள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை…