டில்லி
குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் தான் செல்போனை ஒட்டுக் கேட்பார்கள் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் ராகுல் காந்தி,
“ஆப்பிள் நிறுவனம் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. அது குற்றவாளிகள் மற்றும் திருடர்கள் செய்யும் செயல்.
இளைஞர்கள் ஏகபோக நிறுவனங்களின் இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். நாட்டை ஏகபோக முதலாளிகளிடம் இருந்து விடுவிக்க வேண்டியது அவசியமாகும். பாஜகவினர் வழக்கமாக மோடி, அமித்ஷாவைத்தான் நம்பர் ஒன், நம்பர் 2 என்று சொன்னாலும் உண்மையிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பவர் அதானிதான்.
மோடியும், அமித்ஷாவும் அதானிக்காகவே வேலை செய்கிறார்கள். அனைத்துத் துறைகளிலும் அதானி ஆதிக்கம் செலுத்தி வருகிறார். மத்திய அரசு இந்தப் பிரச்சினைகளை திசை திருப்ப செல்போன் ஒட்டுக் கேட்பு போன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது.”
என்று தெரிவித்துள்ளார்.