புதுச்சேரி

புதுச்சேரி  மாநில அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் முதல்வர் ரங்கசாமி உட்பட 4  அமைச்சர்கள் உள்ளனர்.

அக்கட்சியின் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். சந்திர பிரியங்காவிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம்,வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன.

தற்போது அமைச்சர் சந்திர பிரியங்கா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சந்திர பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்ததால் இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.