வாஷிங்டன்

மெரிக்காவில் நாடாளுமன்ற சபாநாயகர் லெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் ஜனநாயக கட்சி ஆட்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த கெவின் மெக்கார்த்தி என்பவர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் சபாநாயகராக இருந்து வந்தார். சமீபகாலமாக இவர் ஆளுங்கட்சியுடன் இணக்கமாக இருந்து வருவதாகக் குடியரசு கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட பொது செலவின மசோதாவுக்கு ஆதரவாக இவர் வாக்களித்ததாகவும் புகார்கள் எழுந்தன.  இதையொட்டி சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மீது குடியரசு கட்சியினர் நம்பிக்கை இழந்தனர். எனவே அவரை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தைக் குடியரசு கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

காரசார விவாதத்துக்குப் பிறகு தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது குடியரசு கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் தவிர மற்ற அனைவரும் கெவின் மெக்கார்த்தியை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தனர். எனவே 218-208 என்ற வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேறியது.  இதையொட்டி சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 234 ஆண்டுக் கால வரலாற்றில் நாடாளுமன்ற சபாநாயகர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளது முதல் முறையாகும்.