நாதியா, மத்தியப் பிரதேசம்

த்திய பிரதேச மாநிலத்தில் விநாயகர் சிலை கரைக்கும் போது 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.

கடந்த 18 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் மத்தியப் பிரதேசம் தாதியா மாவட்டத்தில் நிராவல் பிடானியா கிராமத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழா முடிந்த பின் கிராமத்தினர் விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைக்கக் கொண்டு சென்றனர். விநாயகர் சிலைகளைக் குளத்தில் கரைக்கும் போது 7 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதைக் கண்ட கிராமத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கிராமத்தினர்  சிறுவர்களை மீட்டனர். ஆயினும் 3 சிறுமிகள் உள்பட 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.

காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.