நியூயார்க்

துருக்கி அதிபர் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை ஐ நா சபையில் எழுப்பி உள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 78-வது அமர்வு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற துருக்கி அதிபர் எர்ட்கன் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

அவர்,

 “பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்கத் தயாராக உள்ளது,  ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியா பங்கு வகிப்பது பெருமைக்குரிய விஷயம்

என்று கூறினார்.

ஐ நா பொதுச் சபைக் கூட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக எர்டோகன் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சனையை எழுப்பி வருகிறார். இந்தியா தரப்பில் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது.  ஏற்கனவே “பிற நாட்டின் இறையாண்மையை மதிக்கத் துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும்” என இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.