டில்லி

தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண இந்தியா கூட்டணி புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளது.  

பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.  நேற்று முன் தினம் இந்த கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நடந்தது. அப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

‘இந்தியா’ கூட்டணி ஓருங்கிணைப்பு கூ சார்பில் இது குறித்து கூறியதாவது:

”மாநில அளவில் பாஜகவைத் தொகுதிவாரியாக, பா.ஜனதாவை எதிர்க்க வலிமையான கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். முந்தைய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வலிமையான கட்சியைத் தீர்மானிக்கப்படும். இதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டசபைத் தேர்தல் அல்லது இரண்டு தேர்தல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட கட்சிகள் எந்த தேர்தலைக் கணக்கில் எடுப்பது என்பதை முடிவு செய்யும்.

ஏதாவது ஒரு மாநிலத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் 2 கட்சிகளுக்கிடையே இதற்கு முன்பு கூட்டணி இல்லாமல் இருந்தாலோ அல்லது பேச்சுவார்த்தையில் சிக்கல் எழுந்தாலோ, அந்த மாநிலத்தில் இடம் பெறாத வேறு ஒரு கூட்டணிக் கட்சி, பேச்சுவார்த்தையில் பாலமாகச் செயல்படும்.  நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியாக இந்தியா இருந்தபோதிலும், வரவிருக்கும் 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களுக்கும் கூட்டணியாகச் செயல்பட்டால்தான் சட்டசபைத் தேர்தல்களிலும் பலன் கிடைக்கும்.

ஏற்கனவே காஷ்மீர், மலாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  அம்மாநிலங்களில் எல்லாம் ஏற்கனவே ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கூட்டணியாக இயங்கி வருகின்றன.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.