டில்லி

ன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முழு ஈடுபாடு காட்டத்தொடங்கி விட்டன.

இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. மேலும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டமும் இன்று நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் 18-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.