வாஷிங்டன்

உலகப் புகழ் பெற்ற டபுள்யூ, டபுள்யூ, இ மல்யுத்த வீரர் பிரே வெயட் மரணம் அடைந்தார்.

உலகம் முழுவதும் டபுள்யூ டபுள்யூ இ எனப்படும் உலக மல்யுத்த விளையாட்டிற்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த விளையாட்டில் பங்கேற்று மிகவும் பிரபலமடைந்த பிரே வெயட் இன் உண்மையான பெயர் விண்ட்ஹம் ரொடுண்டா ஆகும்.

இவர் ‘தி வெயட் பேமிலி’ குழுவின் தலைவராக பிரே வெயட் செயல்பட்டு வந்தார். மூன்று முறை பிரே வெயட் 3 முறை டபுள்யூ டபுள்யூ இ உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தற்போது, 36 வயதான பிரே வெயட் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மல்யுத்த போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.

கடும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிரே வெயட் அதற்கான சிகிச்சைகளைப் பெற்று வந்தார். இன்று, பிரே வெயட்  உயிரிழந்தார்.  இவர் உயிரிழப்பு தொடர்பான அறிவிப்பை டபுள்யூ டபுள்யூ இ மல்யுத்த விளையாட்டு குழு தலைவர் டிரிபுள் ஹெச் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுவரை பிரே வெயட்டின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.  அவர் திடீரென உயிரிழந்துவிட்டதாக வெயட்டின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  பிரபல டபுள்யூ டபுள்யூ இ நட்சத்திரம் பிரே வெயட் மறைவு மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.