டெல்லி: உலகக்கோப்பை செஸ் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ள கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை செஸ் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். இதில் ஏழு டை பிரேக் ஆட்டங்களுக்கு பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதன் காரணமாக, உலகக்கோப்பை வரலாற்றிலேயே அரை இறுதிக்கு முன்னேறிய இரண்டாம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா இதன் மூலம் பெற்றார்.
அரையிறுதிப் போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியானோ கருனாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபாரமாக வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டியில், முன்னாள் உலகச் சாம்பியன் நார்வே நாட்டை சார்ந்த கார்ல்சனை எதிர்கொள்கிறார். விசுவநாதன் ஆனந்தை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியர் பிரக்ஞானந்தா
இந்த நிலையில் பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
மனமார்ந்த வாழ்த்துக்கள் @rpragchess #FIDEWorldCup2023 இல் உங்கள் அபாரமான செயல்திறனுக்காக! ♟️👑 இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பதற்கு எனது வாழ்த்துக்கள் எனெ குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், FIDE world championship23 போட்டியில் அரையிறுதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் Fabiano caruana ஐ வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கும் பாரதத்தின் பெருமைமிகு க்ராண்ட் மாஸ்டர் ப்ர்க்யானந்தாவிற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.