ஜம்மு
இன்று காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.36 மணிக்கு ஜம்மு-காஷ்மீரில் 129 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கமானது அட்ச ரேகை 73.32 ஆகவும், தீர்க்க ரேகை 184 ஆகவும் பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.