புனோம்பென்

ம்போடியாவில் நீண்ட காலம் பிரதமராக இருந்த  ஹுன் சென் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

தெற்காசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.  தேர்தலில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும் தேர்தலில் கலந்து கொண்டது. இந்த தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்குச் சாதகமான நிலையில் வந்தது.

மொத்தம் 125 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது.அதாவது 96 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது. ஆசிய நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென்(வயது 70) மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து சென் பதவி விலக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் 3 வாரங்களுக்குள் பொறுப்புகளை அனைத்தையும் தன் மூத்த மகனான ஹூன் மனேட்டிடம் ஒப்படைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார். ஹூன் மனேட் தற்போது பாதுகாப்புத்துறை இலாகாவை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.