சென்னை

பிரபல திரைப்பட படத்தொகுப்பாளர்  ஆர் விட்டல் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஆர் விட்டல் தமிழ் திரையுலகின் பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆவார்.  இவர். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரின் படங்களில் பணியாற்றி உள்ளார். குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா, கழுகு உள்ளிட்ட 35 திரைப்படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும் படிக்காதவன், சர்வர் சுந்தரம், விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கும் படத்தொகுப்பு செய்துள்ளார்.  அவர் 5 படங்களை இயக்கி 3 படங்களைத் தயாரித்து உள்ளார். இவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் பல திரைப்படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி இவர்களது, கூட்டணியில் 70 திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் ஒட்டுமொத்தமாக 300 படங்களுக்கும் கூடுதலாக, படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று மதியம் மாரடைப்பால் காலமானார். பல  திரை பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது.