சென்னை

ன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் ஜி 20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தலைமைப் பதவி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளைக் கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பான ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

கல்வி, நிதி, பொருளாதாரம், ஆரோக்கியம், வேளாண்மை, கலாச்சாரம், சுற்றுலா, வேலை வாய்ப்பு மற்றும் திறன், எரிபொருள், சுற்றுச்சூழல் மேம்பாடு, பருவநிலை மாற்றம், பன்னாட்டு நல்லுறவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி, பெண்கள் வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவாதம் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்த விவாதம் நடந்து வருகிறது. ஏற்கனவெே தமிழகத்தில் ஜி20 நாடுகளின் கல்வி, நிதி, மகளிர் மாநாடு ஆகியவை நடந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் பேரிடர் பாதுகாப்பு மாநாடு தொடங்கி இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று முதல் ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில்  3 நாட்கள் நடக்கிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிவாஷ் ரஞ்சன், கூடுதல் செயலாளர்கள் நரேஷ்பால் கங்வார், ரிச்சா ஷர்மா ஆகியோர் செய்தியாளர்களிடம்,

“ஏற்கனவே ஜி20 சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு ஏற்கனவே பெங்களூரு, மும்பை, குஜராத் காந்திநகர் ஆகிய நகரங்களில் நடந்துள்ளது. இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் 4-வது மாநாடு சென்னையில் நடக்கிறது. மாநாட்டில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 135 பேர் மற்றும் ஜி20 கூட்டமைப்பில் இல்லாத நாடுகளைச் சேர்ந்த 32 பேர் விருந்தினர்களாகப் பங்கு பெறுகின்றனர். இதுதவிர சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் 23 பேர் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை விரைவுபடுத்துதல், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் பரிமாண சவாலைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள், உலகளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள், அவற்றைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.”

என்று தெரிவித்துள்ளனர்.