டில்லி

ல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற வேண்டியது கட்டாயமில்லை என அறிவித்துள்ளது/

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில்

”கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேசிய தகுதித் தேர்வு(நெட்) மாநில தகுதித் தேர்வான(செட்), மாநில அளவிலான தகுதித் தேர்வு(ஸ்லெட்) போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.. உதவிப் பேராசிரியர் பணிக்கான நேரடி நியமனத்திற்கு பி.எச்.டி.,(முனைவர் பட்டம்) தகுதியாக ஏற்றுக கொள்ளப்பட மாட்டாது”

என்று யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.

அதன்படி, நெட், செட், ஸ்லெட் (NET/SET/SLET) ஆகியவற்றில் ஏதாவதொரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.