மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயல் சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பழங்குடியினர் மீது கரிசனமாக பேசிவரும் பாஜக தனது மற்றொரு முகத்தை காட்டியுள்ளது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

https://twitter.com/AbbasHafeez/status/1676177199463038976

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.