மேஷம்:
இந்த வாரம் எடுத்த முயற்சியெல்லாம் ஈஸியாக் கைகூடும். விரோதிங்ககூட ஃப்ரெண்ட்ஸ் ஆவாங்க. மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். கோர்ட் கேஸ் விஷயங்கள்ளயெல்லாம் இருந்துக்கிட்டிருந்த தொய்வு நீங்கி வேகம் எடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த காம்ப்படிஷன் குறையும். தொழில் விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீங்க. பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க சான்ஸ் இருக்குங்க. மேலதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். விருப்பமானவங்களைச் சந்திச்சு அரட்டையடிச்சு ஹாப்பியாவீங்க. மனத்துணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீங்க. போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கறவங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
ரிஷபம்:
சக ஊழியர்கள் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. உத்தியோகத்துல உள்ளவங்க செய்தொழிலில் முன்னேற்றம் காண்பாங்க. வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீங்க. உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் ஹெல்ப்ஸ் கெடைக்கும். பிள்ளைங்க வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவங்களோட சப்போர்ட் கெடைக்கும். வீடு மனை வாங்கறதுக்கு இவ்ளோ நாளா இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தை வித்துப்போட்டுட்டுப் புது வாகனங்களை வாங்குவீங்க. உத்தியோகத்துல உள்ளவங்க கோபப்படாமல் மேலதிகாரிங்க சொன்ன வேலையை செய்துட்டா நல்லதுங்க. கணவன், மனைவி நெருக்கம் அதிகரிச்சு ஒங்களை ஹாப்பியாக்கும். ரிலேடிவ்ஸ்ஸோட பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கறது பெட்டர். பிள்ளைங்களோட நலனில் அக்கறை செலுத்துவீங்க. பெண்களுக்கு மனசுல இருந்துக்கிட்டிருந்த பயம் நீங்கி துணிச்சல் உண்டாகும்.
மிதுனம்:
பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிங்ககூட நண்பராவாங்க. கலைத்துறைல உள்ளவங்களா நீங்க.. அப்பிடின்னா.. வீண் வெவகாரங்களில் தலையிடாம ஒதுங்கிக்கிக்கிட்டீங்கன்னா ஹாப்பியா இருக்க முடியுங்க. மத்தவங்களுக்கு உதவும் போது கவனமா இருக்கறது நல்லது. அரசியல்துறையில உள்ளவங்க கடின உழைப்புக்குபின் முன்னேற்றம் அடைவாங்க. கலைத்துறைல உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஸ்டூடன்ட்ஸ்க்குக் கல்வியில முன்னேற்றம் உண்டாகும். சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டா போதும்ப்பா. ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுடுங்க. மத்தவங்களுக்காக வரிஞ்சுகட்டிக்கிட்டு தூது போறதுக்கு முன்னால் பல முறை நல்லா யோசிச்சுட்டு இறங்குங்க.
கடகம்:
இந்த வாரம் அன்எக்ஸ்பெக்டட் சுபச்செலவுகள் ஏற்படும். வெற்றி கிடைப்பதில் இருந்த தடை தாமதம் நீங்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். புதுப்புது ஃப்ரெண்ட்ஸ் சேர்க்கையும் ஏற்படும். அவங்களால பிற்காலத்துல நன்மை ஏற்படப்போகுதுங்க. மத்தவங்களுக்கு உதவி செய்யறதுல ஆர்வம் காட்டுவீங்க. பிசின ஸ்லயும் ஜாப் செய்யும் எடத்துலயும் எதிர்ப்புங்க நீங்கும். தொழில் வியாபாரம் கொஞ்சம் மந்தமான நிலையில் இருந்தாக்கூட ஒங்களோட வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுடுங்க. தொழில் வியாபாரத்துல கவனம் செலுத்துங்க. இளம் வயசுக்காரங்க புது ஐடியாஸ் காரணமா புகழ் பெறுவாங்க. ஓய்வின்றி உழைப்பீங்க. குடும்பம் சீராக நடைபெறும். குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. இந்த வாரம் வியாழக்கிழமை, உங்கள் வயதுக்கேற்றபடி முன்னேற்றம் தரக்கூடிய விஷயம் ஒண்ணு நடக்கப்போகுதுங்க. வேலைகளில் சிறுசிறு தடைகள் இருந்தாலும் அதையெல்லாம் துச்சமாய்த் தூக்கிப்போட்டுட்டு, முறியடிச்சு முன்னேறுவீங்க.
சிம்மம்:
உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு வெளியூர் மாற்றல்கள் உண்டாகலாம். ஆபீஸ்ல ஒங்ககூட ஒர்க் பண்றவங்ககூட பேசும்போது கோபப்படாம இருக்கறது நன்மை தரும். ஃபேமிலில உள்ளவங்ககூட இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். ரிலேடிவ்ஸ் ஒங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. உயரதிகாரிங்களின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும். கவர்ன்மென்ட் ஹெல்ப் உண்டுங்க. தொழில் செய்பவருக்கு அதிக ஆதாயத்துடன் புதிய வேலை வந்து சேரலாம். கடிகாரத்துலயும் காலண்டர்லயும் ஒரு கண் வெச்சுக்கறது நல்லது. நான் சொல்றதுக்கு முன்னாடிய இது பற்றி ஒங்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்குமே? ரைட்டா! ஒங்களோட குழந்தைகளுக்கு மேலும் மேலும் குட் நியூஸ் உண்டு. அவங்களுக்கு உங்களால நன்மை ஏற்படுவது யூஷுவல்தான். அவங்களால ஒங்களுக்கு நன்மை ஏற்படப் போகுதுங்க. எனவே அவங்க என்றென்றும் நன்றியோட இருப்பாங்க.
கன்னி:
முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டானாலும் இந்த வாரமே முடிஞ்சுடும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில குட் நியூஸ் வரும். ஆபீசில் ஒங்க கூட வேலை பார்க்கறவங்க கிட்ட ஜோக் அடிக்கும்போது அவங்க மனசு புண்படாதபடி கவனமா இருக்கறது நல்லதுங்க. நீங்க ஸ்டூடன்ட்ஸாயிருந்தா சக மாணவர்கள்கிட்ட சகஜமாக பேசி பழகுவது நல்லது. உங்க டீச்சர்ஸ உங்களைப் பாராட்டும்படி நடந்துக்குவீங்க. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிச்சு வெற்றி காண்பீங்க. அதே சமயம் நிறைய டைவர்ஷன்கள் இருக்கும். எதிலயும் சிக்கிடாதீங்க. ப்ளீஸ்.. ஆபீஸ்ல வேலை பார்க்கறவங்க, வருங்கால நலன் கருதிப் புது முயற்சி எடுப்பீங்க. சுப செலவுகளால் சேமிப்புகள் கரைஞ்சாலும் அது சந்தோஷம்தாங்க குடுக்கும். குடும்பத்தாரின் குறைகளைத் தீர்க்க முன்வருவீங்க. ரொம்ப நாளா சந்திக்காத ஃப்ரெண்டை சந்திப்பதால் மனசு நிறையும்.
துலாம்:
மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்வதில் ஆர்வம் காட்டுவீங்க. பணவரத்து தாமதப்படும். பட் கெடைச்சுடும். உங்க மம்மி அல்லது டாடி ஒங்க மேல இருந்த கோபத்தைக் குறைச்சுக்கிட்டாங்க. சபாஷ். கலைத்துறைல உள்ளவங்களுக்கு மனசுல துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள்ளதாங்க இருக்கும். இத பாருங்க….சிறு சிறு டென்ஷன்கள் இருக்கிறதே என்று கவலை வேண்டாம். முன்பிருந்தமாதிரி பெரிய பெரிய டென்ஷன்கள் இல்லையே என்று சந்தோஷப்படுங்கள். ஏன் தெரியுமா? அந்தக் கவலையெல்லாம் உங்க ஆரோக்யத்தை டச் பண்ணிப்பார்க்க ட்ரை பண்ணிடுங்க. விடாதீங்க. ஆபீசுல ஒங்களுக்கு ஒரு வழிகாட்டி கெடைப்பாரு. கடன்கள் வாங்க இது ரைட் டைம் இல்லீங்க. போஸ்ட்போன் பண்ணிடுங்க. ஒண்ணு நிச்சயம். இத்தனை காலம் ஃபேமிலியில் பாடாய்ப்படுத்திக்கிட்டிருந்த பிரச்சினைங்கள்லேயிருந்து கண்டிப்பா கொஞ்சமாச்சும் வெளியே வருவீங்க.
சந்திராஷ்டமம் : ஜூன் 15 முதல் ஜூன் 18 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.
விருச்சிகம்:
ஒங்களுக்கு ஆபீஸ்லயும் உறவு வட்டாலத்துலயும் பொறுப்புங்க கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைச்சு ரொம்பவே ஹாப்பி ஆயிடுவீங்க. குடும்பத்துல வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சியான அட்மாஸ்பியர் உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வராம பாதுகாப்பா இருந்துடுவீங்க.வெரிகுட். ஒங்க பிள்ளைங்க ஒங்க மனசு மகிழும் படி நடந்துக்குவாங்க. லேடீஸ் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்கி சந்தோஷப்படுவீங்க. மனசுல உற்சாகம் பிறக்கும். பிசினஸ் செய்யறவங்களுக்குத் தேவையான ஹெல்ப்பெல்லாம் கெடைக்கும். தொழில் செய்யறவங்க, நவீனக் கருவிகளின் துணையோடு பணிகளை விரைந்து முடிப்பாங்க. குடும்பத்தில் இருந்து வந்த டென்ஷன்ஸ் உங்க முயற்சியால் முடிவுக்கு வரும். பயணத்திட்டத்தால உங்க விருப்பம் ஒண்ணு நிறைவேறும்.
சந்திராஷ்டமம் : ஜூன் 18 முதல் ஜூன் 20 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
தனுசு:
கலைத்துறைல உள்ளவங்களுக்குப் புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் போகும்படி நேரலாம். கடன் கொடுத்தவங்க கிட்டேயிருந்து பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காண்பீங்க. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நினைப்பவர்கள் அது பற்றி அனுபவ சாலிங்க கிட்டேயோ.. ஒங்களோட வெல்விஷர்ஸ் கிட்டேயோ ஆலோசனை கேட்ட பிறகு ஈடுபடறது பெட்டர். அலுவலகம் சம்பந்தமான முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். ஃப்ரெண்ட்ஸ்க்கு இடையில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். எஸ்பெஷலி ஒங்க டீச்சர்ஸ் உதவி செய்வாங்க. இந்த வருஷம் சமீபத்துல படிச்சு முடிச்சுட்டு வேலைக்காகக் காத்துக்கிட்டிருக்கறவங்களுக்கு கவர்மென்ட் கிடைக்க வாய்ப்பு அதிகம். படிப்புக்கேற்ற வேலை இப்போதைக்குக் கிடைக்கலைன்னாலும், கிடைச்ச வேலையை ஒப்புக்குங்க. இதுவும் பிடிக்கும். கொஞ்ச காலத்தில் சூப்பர் வேலை கிடைக்கப்போகுது.
சந்திராஷ்டமம் : ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
மகரம்:
ஆடம்பரமான செலவுகளைக் குறைச்சுக்குங்களேன்… ப்ளீஸ்…அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. பணவரவு திருப்தி தரும். . பெண்களின் முயற்சியால் வீட்ல மகிழ்ச்சி பொங்கும். நண்பர்கள் ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லா இருப்பாங்க. உத்தியோகத்துல உள்ளவங்க உயரதிகாரிகளை அனுசரிச்சு நல்ல ரிசல்ட் பார்ப்பீங்க. இந்த வாரம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடிஞ்சுடும். வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் சின்ன அளவில் நன்மையும் ஏற்படும். வழக்குகளில் இருந்துவந்த சோதனைகள் மாறும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். நண்பர்கள் வெவ்வோறு சந்தர்ப்பங்கள்ல ஆதரவாக இருப்பாங்க. ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பிராப்ளம்ஸ் குறையும். மெயில் போக்குவரத்து மூலம் அனுகூலம் உண்டாகும்.
கும்பம்:
ஆபீஸ் வேலைங்கள்ல முன்பிருந்த அலைச்சலெல்லாம் மெதுவாக் குறைஞ்சு ரெஸ்ட் கெடைக்கும். நிறையப் பணம் சேமிச்சு வைக்கப் பாருங்க. குடும்பத்துல இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். குழந்தைங்க உங்களை நாடி உதவி கேட்பாங்க. வெளிநாட்டுலேயிருந்து நிறைய கிஃப்ட்ஸ் வரும். நீங்களும் ஒரு ட்ரிப் கிளம்ப வாய்ப்பு இருக்கு. நெருங்கின உறவுக்காரங்களை அனுசரிச்சுப் போயிடறது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசறது குறைஞ்சுடாம கேர்ஃபுல்லா இருங்க. வீண் மனக்கவலை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறையும். உடன் பிறந்தவங்க செய்கையும் வருத்தம் தரலாம். மன்னிச்சு விட்ருங்க. பொழுது போக்கு அம்சம் அதிகமாகி ஜாலியா இருப்பீங்க. இந்த வாரம் ஃபைனான்ஷியலா, சின்னதா ஒரு குட் நியூஸ் வரப்போகுதுங்க.
மீனம்:
பிசினஸ் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்துல உள்ளவங்க திருப்தியாக உணர்வாங்க. பணவரத்து இருக்கும் சக ஊழியர்களின் ஹெல்ப் கெடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஹாப்பினஸ் நீடிக்கும். பிள்ளைங்க நீங்க சொல்றதைக் கேட்டு நடப்பாங்க. அவங்களுக்குத் தேவையானதையெல்லாம் வாங்கிக்குடுத்து சந்தோஷப்படுத்துவீங்க. தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனசுல தெளிவு உண்டாகும். பணவரத்து நீங்க எதிர்பார்த்த அளவு இல்லாட்டியும் ஓரளவுக்காவது இருக்கும். பிரச்னைங்க குறைஞ்சு நிம்மதியடைவீங்க. நல்ல முயற்சிகள் கட்டாயம் நல்ல பலன் கொடுக்கும் வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகள் பலன் தரும். ஆனால் அதற்காக நிறைய முயற்சிகளும் அலைச்சலும் இருக்கும். அதனால் என்ன.. உழைப்புக்கும், முயற்சிக்கும், அலைச்சலுக்கும் ஏற்ற பலன்தான் இருக்கப்போகுதே. பிறகென்ன?