திருச்சி
திருச்சி நகரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளைத் தூர் வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று இந்த பணிகளை நேரில் பார்வையிடத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சிக்கு வர உள்ளார்.
எனவே திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றாக இன்று மற்றும் நாளை திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.