சேலம்:
ஹெல்மட் அணிந்து காரை ஓட்டவில்லை எனக்கூறி சேலம் நகர போக்குவரத்து காவல் துறையினர் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே டூவீலர் மெக்கானிக்கான வெற்றிவேலின் செல்போன் எண்ணிற்கு நேற்று குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில், சேலம் சாலையில் காரில் செல்லும் போது, ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வெற்றிவேலின் வீட்டு முகவரி, கார் எண் உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு வாரமாக காரை வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்த நிலையில் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் வெற்றிவேல் தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலம் போக்குவரத்து காவல்துறையினர் தரப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.