சென்னை:
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 171 ரூபாய் குறைந்துள்ளது.
இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 2021 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.