சென்னை:
காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலை தூக்கியுள்ள நிலையில், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி ஜெயக்குமார் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நிலையில் திடீரென அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் டெல்லியில் உள்ள வீட்டில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் முழுவதுமாக குணமாகியவுடன் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.