சென்னை: ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றாகை இணைக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது. இதுதொடர்பாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 09-ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை இணைக்கவேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டிருந்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன்முலம் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரம் மற்றும், மின் நுகர்வோர் குறித்து உரிய டேட்டாக்கள் இல்லை, அதை சேகரிக்கவே இந்த நடைமுறை என்று விளக்கம் அளித்தது. இதனால் வாடகைக்கு குடியிருப்போர் நிம்மதி அடைந்திருந்தனர்.
இந்த நிலையில், மின்துறை அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று வெளியானது. அதில், ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மின் கட்டணம் பல மடங்கும் உயரும் நிலை உருவானது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகின.
இந்த நிலையில், இந்த தகவல் தவறாது என தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, ஒன்றாக்கவே ஆதார் – மின்சார எண் இணைக்க வலியுறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகள் தவறானது என்று கூறியுள்ளதடன், இது தொடர்பாக பரவும் கடிதம், பிரிவு அலுவலரின் தனிப்பட்ட கள ஆய்வு செயல்; அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட மின்இணைப்புகள் ஒன்றாக இணைக்கப்படும் என்ற சுற்றறிக்கையானது, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ந்தேதியே மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பொதுமக்கள் தெரியாத வகையில், மறைக்கப்பட்டு வந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என நவம்பர் 28ஆம் தேதி முதல் அதற்கான பணிகள் தொடங்கிய பல முறை அவகாசம் வழங்கப்பட்டு பிப்ரவரி 28 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகே, மின்துறை அதிகாரிகளின் கடிதம் வெளியே தெரிய வந்துள்ளது. ஆனால், அமைச்சர் அதை தவறான தகவல் என்று கூறி, அந்த சுற்றறிக்கையை அனுப்பிய அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 விழுக்காட்டிற்கு மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரு நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கப்படுவதற்காகவே ஆதார் எண் பெறப்பட்டு மின் இணைப்புடன் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளார்.
ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. இது தொடர்பாக எந்த உத்தரவும் இதுவரை எந்த பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 09-ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை இணைக்கவேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டிருந்த போதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இதுதொடர்பாக எந்தவொரு செயல் உத்தரவும் தற்போது பிறப்பிக்கப்படவில்லை என்றும், இதுகுறித்த கடித வரைவை வெளியிட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
(அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல, ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை இணைக்கவேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டிருந்த போதிலும், என்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டு உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், விரைவில், அதற்கான உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கலாம் – ஒருவேளை இந்த உத்தரவே ஒரு டிரையலாகவும் இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஏனென்றால், அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் ஒரே இணைப்பாக இணைக்கப்பட மாட்டாது என எங்கும் உறுதியாக குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது)
தமிழக மக்களுக்கு அடுத்த ஆப்பு: ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே இணைப்பாக்க ஸ்டாலின் அரசு உத்தரவு…