சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை 4லிருந்து 6 ஆக உயர்த்த மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்ருதுள்ளனர்.

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், மெட்ரோ ரயில்களில் 3 பெட்டிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதாவது,   3 பொதுப் பெட்டி, ஒரு மகளிர் பெட்டியும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதலாக 2 பெட்டிகள் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இனிமேல் ,  6பெட்டிகளுடன் மெட்ரோ ரயில்இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மெட்ரோ ரயிலில் பெட்டிகளை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து அறிக்கை தயார் செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான பணி முடிந்து விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வர ஓராண்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.