சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவராத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.  இதனால், புரசைவாக்கம், பெரம்பூர், வில்லிவாக்கம்  உள்பட அந்த பகுதிகளில் செல்பவர்கள் மாற்று வழிமூலம் தங்களது இடங்களை சென்றடையலாம்.

சென்னை ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அயனாவரத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) சந்திப்பு முதல் ஆண்டர்சன் சாலை சந்திப்பு வரை, 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக இன்று காலை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

மெட்ரோ ரெயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக வேண்டி ஆண்டர்சன் சாலை மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது.

பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.

கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, டேங்க் பண்ட் சாலை, சந்திரயோகி சமாதி தெரு மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

அல்லது. கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர் சன் சாலை வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து வலது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, ஒட்டேரி சந்திப்பு, குக்ஸ் சாலை மற்றும் பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

அல்லது கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் வழியாக பெரம்பூர் செல்ல வேண்டிய வாகனங்கள், கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி கொன்னூர் நெடுஞ்சாலை, போர்சுகீஸ் சாலை, கான்ஸ் டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை வழியாக செல்லலாம்.

கான்ஸ்டபிள் சாலையில் பில்கிங்டன் சாலை சந்திப்பில் இருந்து ஆண்டர்சன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்ல கூடிய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பில்கிங்டன் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கனரக வாகனங்கள் கான்ஸ்டபிள் சாலை மற்றும் பில்கிங்டன் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கான்ஸ்டபிள் சாலை, போர் சுகீஸ் சாலை வழியாக கொன்னூர் நெடுஞ்சாலைக்கு செல்லலாம்.

கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் கொன்னூர் நெடுஞ்சாலையில் நேராக சென்று இடது புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம்.” என்று சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.