பெங்களூரு: ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக, விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டது Vihaan Direct Selling (india) Private Limited. கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்க பல கிளைகள் உள்ள நிலையில், வருமான வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் மும்பை அமலாக்கத்துறையினர் விகான் டைரக்ட் செல்லிங் இந்தியா என்கிற தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். அந்நிறுவனத்தின் சென்னை, மும்பை, பெங்களூருவில் உள்ள கிளைகளில் அதிரடி ரெய்டு நடத்தியது. இந்த சோதனையில் சுமார் 400 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த நிறுவனம் 2 ஆயிரம் கோடி அளவுக்கு பண பரிமாற்றத்தத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 36 வங்கி கணக்குகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர்.
விஹான் நேரடி விற்பனை (இந்தியா) பிரைவேட் லிமிடெட்
Vihaan Direct Selling (india) Private Limited என்பது ஒரு அரசு சாரா நிறுவனமாகும், இது 10 அக்டோபர், 2011 அன்று இணைக்கப்பட்டது. இது ஒரு தனியார் பட்டியலிடப்படாத நிறுவனம் மற்றும் ‘பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுவனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ 10.0 லட்சமாக உள்ளது மற்றும் 100.0% செலுத்தப்பட்ட மூலதனம் ரூ 10.0 லட்சம் ஆகும். விஹான் டைரக்ட் விற்பனை (இந்தியா) பிரைவேட் லிமிடெட் கடந்த ஆண்டு பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) 30 செப்., 2017 அன்று நடந்தது. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (எம்சிஏ) படி நிறுவனம் தனது நிதிநிலைகளை கடைசியாக 31 மார்ச், 2017 அன்று புதுப்பித்தது.
Vihaan Direct Selling (india) Private Limited கடந்த 12 வருடங்களாக வர்த்தக வணிகத்தில் முக்கியமாக உள்ளது, தற்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் செயலில் உள்ளன. தற்போதைய குழு உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர்கள் சூரியநாராயண காந்த விஜயசாரதி, திலீப்ராஜ் புக்கேல்லா மற்றும் முஹம்மது இம்தியாஸ்.
நிறுவனம் பெங்களூர் (கர்நாடகா) பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.